உண்டியல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத பரிவர்த்தனை நிறுவனங்களை சட்டவிரோத பரிவர்த்தனைகளாக அறிவிக்க நிதி அமைச்சின் நிதி புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது.
பகிரங்க அறிவிப்பு
பரிவர்த்தனை செய்பவர்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் இதுவரையில் எந்த நிறுவனமும் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை என்று நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் பதிவு செய்யப்படுவதுடன், அந்த பரிவர்த்தனைகளின் செயல்திறனை சர்வதேச அளவில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam