மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து நாளை தீர்மானிக்கப்படும்! - காமினி ராஜரத்ன
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மாகாண சபையின் பொதுச் செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், “மத்திய மாகாணத்தில் பல பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய மாகாண கோவிட் கட்டுப்பாட்டு குழு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நாளை மாலை கூடி, பிரச்சினைகள் குறித்து விவாதித்து பின்னர் பாடசாலைகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என காமினி ராஜரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், மத்திய மாகாணத்தில் பாடசாலைகளின் நடவடிக்கைகள் நாளை வழக்கம் போல் மீண்டும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.