அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுயாதீன குழுக்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுயாதீன குழுக்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் நேற்று பிற்பகல் அந்தக் குழுக்கள் நடத்திய கலந்துரையாடலின் போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கக் குழுக்கள் தீர்மானித்துள்ளதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,