பங்குச் சந்தை வர்த்தகத்தை இரண்டு மணி நேரமாக மட்டுப்படுத்த முடிவு!
தினசரி வர்த்தக நேரத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது.
அதன்படி, நேற்று (31) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்திற்கு திறந்திருந்ததுடன், இன்று (01) தினசரி வர்த்தக காலம் 2 மணிநேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குச் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெற்றுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை வர்த்தகத்திற்கு முந்தைய அமர்வும், காலை 10.30 மணிக்கு பகிரங்க ஏலம் நடைபெறும். தினசரி வர்த்தகம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு சந்தை முடிவடைகிறது.