அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானம்? மைத்திரி தரப்பின் முடிவு
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கருத்தாடல்கள் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாகத் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், அரசாங்கத்தில் இருந்து அந்த கட்சியை நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மைக்காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
