விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக நாளை வவுனியாவில் போராட்டம்
வவுனியா மாவட்டத்திலும் நாளைய தினம் காலை 9மணிக்கு வவுனியா மாவட்ட அனைத்து கமநல சேவை நிலையம் முன்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் அமைப்பாளர் நடராசா கருணாநிதி (Nadarasa Karunanidhi) தெரிவித்துள்ளார்.
நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும், தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து அனைத்து கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாகவும் விவசாயிகள் நாளை தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வடக்கிலும் , கிழக்கிலும் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.
பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இந்த போராட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் (Sumanthiran) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
