கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கவில்லை! பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில் முடக்க நிலையை தளர்த்துவதற்கு காலவரையை தீர்மானிப்பது கடினமான ஒன்று என சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இது உரிய தருணம் கிடையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டவுனிங் வீதியில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசிய அவர், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 37 ஆயிரம் பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் என்ஹெச்எஸ் மீதான அழுத்தம் கூடியுள்ளது. இதனை நாங்கள் குறைக்க வேண்டும்.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, எனினும், தினசரி இறப்பு எண்ணிக்கையைப் போலவே மருத்துவமனையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 592 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மேலும் 22,195 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள முடிகின்றது.
எனினும், நாங்கள் உண்மை நிலையினை பார்க்க வேண்டும்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பொது மக்கள் காலவரையறையை எதிர்ப்பார்கின்றனர். எனினும், காலவரையை தீர்மானிப்பது கடினமான ஒன்றாகும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri