தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி

TNA Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Farook Sihan Aug 17, 2022 09:22 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர். இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள். செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி | Deceived Trusting The Tamil National Federation

அம்பாறை மாவட்டத்தில் இன்று இடம்பெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரியும் வரை தொடரவுள்ளது.

138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம். அது மட்டுமல்ல காணாமல் போனோரின் அலுவலகத்தினை நாங்களும் 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கின்றோம்.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன? இன்று உறவுகளை இழந்து தவித்த 8 மாவட்டங்களை சேர்ந்த நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

உள்ளக பொறிமுறை விசாரணைக்கு எதிர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இச்செயலில் இறங்குவதானது எமக்கு மனவருத்தத்தை தருவதுடன் ஆத்திரமடைகின்றோம். அது மட்டுமல்ல இந்நாட்டில் இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று அனைத்து உலக சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம். அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி | Deceived Trusting The Tamil National Federation

இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம். ஒன்றுமில்லாத காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி) ஒன்றினை எம்மிடையே திணிக்க இலங்கை அரசு பார்த்தது. ஒன்றுமே இல்லாத அலுவலகம் என்பதனால் நாங்கள் இன்று வெறுத்திருக்கின்றோம்.

இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?இன்று அவர்களது கதிரைகளை தக்க வைத்து கொள்ளவா?அடுத்த தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வதற்கா?என்பது எங்களுக்கு கேள்வி குறியாகவே உள்ளது.

ஆகவே எங்களது விடயத்தில் தயவு செய்து மூக்கை நுழைக்க வேண்டாம். எங்களுக்கு விடுதலையை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எங்களது உறவுகளுக்கான நீதி கிடைத்திருக்கும். ஆனால் நீங்கள் கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசுடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

எதிர்வரும் 9 ஆம் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.”என கூறியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US