இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை
இலங்கை அதிகாரிகளும் உலகளாவிய முதலீட்டாளர்களும், இலங்கையின் 12 பில்லியன் டொலர் பெறுமதியான திருப்பி செலுத்தாத கடன் பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனில் ஏப்ரல் 15ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த காலக் கூட்டங்கள் தொடங்கவுள்ளது.
அதனையடுத்து, வழிகாட்டுதல் குழு என அழைக்கப்படும் பத்திரதாரர்களின் குழு, இந்த விவாதங்களைத் தொடர திட்டமிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
ஜ.எம்.எப் நிதியானது தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமானது.

அரசாங்கம் ஏற்கனவே சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் ஆகிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan