உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு! சற்றுமுன் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
ஐந்து வருடங்களுக்குள் 41.5 பில்லியன் டொலர் மொத்த வெளிநாட்டு கடனில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதற்கேற்ப உள்நாட்டு கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலக புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வங்கி முறையின் ஸ்திரத்தன்மை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நாட்டின் வங்கி முறையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கி வைப்புகளுக்கோ வங்கி வைப்புகளுக்கு தற்போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |