மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் (Live)
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்மொன்று ஆரம்பமாகியுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இன்று(29) விவாதிக்கப்படுகிறது.
இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம்

இதேவேளை, நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் நாளை பிற்பகல் 1.00 மணியளவில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து விவகாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.