பல வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோவிட் மரணங்கள்! சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்
பல நாட்களுக்கு, வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோவிட் இறப்புகள் ஒரு நாளில் வெளியாவதற்கான காரணத்தை சுகாதார அமைச்சகம் இன்று விளக்கியுள்ளது.
சில இறப்புகளை உறுதிப்படுத்த கணிசமான காலம் எடுப்பதாக சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தாமதம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொருத்தமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கோவிட்-19 இறப்புகளை ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இறப்புகள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன.
எனவே அதற்கு, காலம் எடுக்கலாம் என்று ஹேரத் வலியுறுத்தினார். இது சுகாதார அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக நடக்கிறது என்று அர்த்தமல்ல.
எனவே இறப்புகளின் எண்ணிக்கையை மறைக்கவோ அல்லது பெரிதுபடுத்தவோ எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஹேரத் தெரிவித்தார்.



