வீடுகளிலேயே இடம்பெற்றுள்ள 28% இறப்புகள் - பெரிய பேரழிவாக மாறும் என எச்சரிக்கை
கோவிட் இறப்புகளில் 28%மானவை வீடுகளில் இடம்பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிர்வாக குழு
உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்ட மொத்த நாளாந்த இறப்பு பதிவுகளை தாம் கவனித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தரவுகளை வைத்து பார்த்தபோது ஒரே நாளில் கிட்டத்தட்ட 38 கோவிட் இறப்புகள் இடம்பெற்றுள்ளமை தெரியவருகிறது.
ஆயினும், தொற்றுநோயியல் பிரிவிலிருந்து தாமதமான புள்ளிவிபரங்கள் வருவதால் கணிப்புகளைச் செய்வது மற்றும் முடிவுகளுக்கு வருவது மிகவும் கடினம்.
தொற்றுநோயியல் பிரிவில் இருந்து புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தவறான தன்மையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது, மேற்கு மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.
கோவிட் இறப்புகளில் 28% மானவை வீடுகளில் நிகழ்ந்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வீடுகளில் ஏற்பட்ட இறப்புகள் 18 சதவீதமாகும்.
எனவே, நிலைமையை துல்லியமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், நிலைமை
ஒரு பெரிய பேரழிவாக மாறும் என்று கொலம்பகே எச்சரித்துள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri