புதிய உச்சத்தை எட்டியுள்ள ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்கள்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
ஈரானின் ஆன்மீகத் தலைநகராகக் கருதப்படும் கும் (Qom) நகரில் உள்ள 'நிபுணர்கள் அவை' (Assembly of Experts) கட்டடத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொண்ட இந்த முக்கியமான அமைப்பின் மீதான தாக்குதல் ஈரானுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குண்டு தாக்குதல்
இதற்கிடையில், தெஹ்ரானின் புரட்சிச் சதுக்கம் (Revolution Square) மற்றும் அரசு ஊடக நிலையங்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஈரானில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளது.

மறுபுறம், லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 246 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிராகரிப்பு
போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகளை ஈரான் தூதுவர் அலி பஹ்ரைனி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
"தற்போது அமெரிக்காவுடன் பேச ஒரே வழி பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மட்டுமே; பேச்சுவார்த்தைக்கு இது நேரமல்ல" என்று அவர் ஐக்கிய நாடுகள் சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam