வெளிநாட்டில் இருந்து இலங்கை அதிகாரிகளுக்கு வந்த கொலை மிரட்டல்
தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும் மூன்று அங்கத்தவர்களின் வீடுகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் இந்த மரண அச்சுறுத்தலை மேற்கொண்டவர் இந்த நாட்டில் இல்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட சந்தேகநபர் காலி மாவட்டத்தை வதிவிடமாக கொண்டிருந்தாலும் அவர் வெளிநாட்டில் இருப்பதாகவே விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று
வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
