மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி சந்தியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை கெவல் 20 மதவாச்சி சந்தியில் வசித்து வரும் ரத்னாயக்க முதியோர் துலார சதுல (26வயது) எனவும் தெரியவருகின்றது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரம் பழுதடைந்து காணப்பட்டமையால் அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கொண்டு செல்லப்பட்ட போது இடை வழியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை பார்வையிடுவதற்கு நீதவான் வருகைதர உள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
