திருமண வைபவத்தில் மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகன்!- குற்றப் பார்வை (Video)
கடந்த திங்கட்கிழமை திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமனார் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது , கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவனால் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ள போதிலும் , அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார்.
மேலும், இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை விசேட தொகுப்பு இதோ,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
