உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
வங்கியில் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் இவர் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மோசடி
67 வயதான ட்ரூங் மை லான், ஒரு பணக்கார பெண் எனவும் சொத்து மேம்பாட்டு வணிகங்களை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் 11 ஆண்டுகளில் 44 பில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக இது கருதப்பட்டது.
உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய வங்கி மோசடி தொடர்பான விசாரணை இதுவாகும்.