வெளிநாட்டில் இருந்து காதலிகளுடன் இலங்கை வந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
புத்தாண்டு கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்த இலங்கை வந்த இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற ரஷ்ய நாட்டவர்கள் இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 33 வயதுடையவர்களாகும். குறித்த இளைஞர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் இலங்கை வந்துள்ள நிலையில் ஹிக்கடுவ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் போது கரையில் இருந்த காதலிகள் இருவரும், அங்கிருந்த மக்களின் உதவியுடன் அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மறுநாள் காலை மற்ற இளைஞனின் உடலில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே இரவில் 66500 லட்சம் ரூபா பணம் அச்சடிப்பு! ஆட்சியை வீழ்த்த மக்கள் தயார்? - பத்திரிக்கை கண்ணோட்டம் VIDEO வை பார்வையிடவும் |