வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம் - கோவிட்டா என சந்தேகம்
வவுனியா ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கி விழுந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்று காலை ஓமந்தை பாலமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.
எனினும் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ரவிக்குமார் என்ற 54 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட றபிட் அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆயினும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
