இஸ்ரேலில் குழந்தைகளை கொன்ற விவகாரம்: ஈரானை கடுமையான எச்சரித்த அமெரிக்கா
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்பானது அங்குள்ள குழந்தைகளை கொள்வதான புகைப்படங்களை பார்த்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் கொலை தொடர்பான படத்தை பைடன் பார்க்கவில்லை. இஸ்ரேலில் இருந்து வரும் தகவல் அடிப்படையில் கூறினார்'' என விளக்கமளித்ததுள்ளது.
ஈரானை நோக்கி நகரும் யுத்தம்!! போர் ஒத்திகைகளை ஏற்கனவே முடித்துக் கொண்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் (Video)
ஜாக்கிரதையாக இருங்கள்
இது தொடர்பில் பைடன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‛‛அமெரிக்க விமானங்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளன. கூடுதல் போர் விமானங்கள் செல்ல உள்ளன.
ஈரானியர்களுக்கு தெளிவாக சொல்ல விரும்புவது என்னவென்றால் ஜாக்கிரதையாக இருங்கள்'' என எச்சரித்த்துள்ளார்.
மேலும், ஹமாஸ் தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் உறுதி
போர் விவகாரம் தொடர்பில், இஸ்ரேலிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
“கைக்குழந்தைகளும் படுகொலை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றது. இந்த கொடூரமான செயல்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஈடுபடுவார்கள் என நினைக்கவில்லை.
ஆனால், இதனை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் செயலை, இறந்த குழந்தைகளின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். காசாவில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் தாக்குதல் குறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்கிரமடையும் போர்! இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை
நீண்ட கால மோதல்
இதன்போது முகமது பின் சல்மான் கூறும்போது, ‛‛ தற்போதைய மோதலை தவிர்க்க சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் சவூதி அரேபியா தொடர்பில் உள்ளது.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது'' என கூறியதாக குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்த நிலையில் சீனா அன்மையில் மத்தியஸ்தம் செய்து வைத்தது.
இதனையடுத்து மார்ச் மாதம் உறவை புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.