சிறந்த ஆளுமையை இழந்துள்ளது தமிழ் இனம்!
கொழும்பில் சவால் மிக்க பல வழக்குகளில் சாதித்த சிறந்த ஆளுமையை தமிழ் இனம் இழந்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்களின் துணைவியார், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று காலமானார்.
இது குறித்து தமது அனுதாபங்களைத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் உடலை யாரும் இல்லாத சூழலில் மீட்டது முதல் யாழில் அடக்கத்திற்கு எடுத்து வருவது வரை ஆபத்து நிறைந்த காலத்தில் பக்கபலமாக இருந்த குடும்பம். வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவை எனவும் சசிகலா ரவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
