மஹாவலி கங்கையில் பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை
மஹாவலி கங்கையில் கட்டுமரத்தை கட்டுவதற்காகச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைய, நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாகரமாக மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி, மெதகஹவதுர பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஜி.திஸ்ஸ (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெதகஹவதுர பிரதேசத்தில் மஹாவலி கங்கைகையக் கடப்பதற்கான பாலமானது உடைந்து விழுந்துள்ளதால், பிரதேச மக்கள் கங்கையைக் கடப்பதற்கு கட்டுமரத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நாவலப்பிட்டியில் நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுமரத்தைக் கயிற்றால்க் கட்டுவதற்குச் சென்றபோதே, குறித்த நபர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒன்றறைக் கிலோமீற்றர் தொலைவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam