இலங்கையில் கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு
கொழும்பு - பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாக கொழும்பு காசல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் வரிசைகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள்
ஹட்டனைச் சேர்ந்த குறித்த பெண் இன்று காலை கடவுச்சீட்டு வரிசையில் நின்று கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் பெண்ணை, பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் மகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் தற்போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam