யுத்த காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய உயர் அதிகாரி மரணம்
யுத்த காலத்தில் வன்னி மக்களுக்கு சேவையாற்றிய செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரி சித்திரவேலு காலமானார்.
யாழ்.வேலணையில் பிறந்து மட்டக்களப்பில் ஆர்.டி.ஒ ஆக முன்னாள் மட்டு அரச அதிபர் அந்தோனிமுத்து அவர்களுடன் மட்டக்களப்பு மக்களுக்கு சேவையாற்றிய சித்திரவேலு அவர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலக உயர் அதிகாரியாக முன்னாள் மட்டு அரச அதிபர் மௌனகுரு சாமியுடன் கடமையாற்றி மட்டக்களப்பு மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.
பின்னர் கெயார் இன்டர்நெசனல் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பணிப்பாளராக கடமையாற்றி மக்களிற்கான தேவைகளையும் யுத்த காலத்தில் திறம்பட செய்து முடித்தவர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் கணேஸ் அவர்களுடன் இணைந்து சேவையாற்றி யாழ்.மாவட்ட மக்களின் நற்பெயரினை பெற்றுக்கொண்டார்.
யுத்த இறுதி காலத்தில் வன்னி மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள், மருத்துவ பொருட்கள், என்பனவற்றை செஞ்சிலுவை சங்க அதிகாரியாக அச்சுறுத்தல் மத்தியிலும் பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தவர்.
குறிப்பிட்ட செஞ்சிலுவை சங்கத்தின் உயர் அதிகாரி, அன்னாரது பிரிவு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு பேரிழப்பாகும் என தமது அஞ்சலியினை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்த காலப் பகுதியில வடக்கு கிழக்கு மக்களுக்கு அமரர் சித்திரவேல் சிறந்த சேவையாற்றியவர். எனவே அன்னாரின் சேவைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டியவை ஆகும் என செஞ்சிலுவை சங்கத்தின் உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.







அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
