நீரில் மூழ்கி சிறுமியொருவர் மரணம்: மற்றுமொரு சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமி பாசல்மாவத்த - ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10வயது) எனவும் நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி - மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10வயது) எனவும் தெரியவருகின்றது.
இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை
எழுதிவிட்டு தமது வகுப்பாசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்குச் சென்ற நிலையில்
பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய சிறுமி அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
