வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் மரணம்
வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளார்.
இவர் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் தொற்று நோயியலாளராகவும், மாவட்ட கோவிட் கட்டுப்பாட்டு செயலணி உறுப்பினராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் போது தலையில் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 58 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.




