யாழில் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த சோகம்
யாழில்(Jaffna) வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ், மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரண விசாரணை
குறித்த பெண்ணுக்கு நீண்டகாலமாக வலிப்பு நோய் இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 6.30 மணியளவில் குறித்த பெண் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயான இவர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
