காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தாயார் இன்று உயிரிழப்பு
2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும், அ.ஈழம் சேகுவேராவின் தாயாருமான தேவகி அம்மா உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
புற்றுநோய் காரணமாக அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட அவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
மகன் பற்றிய நம்பகமான தகவல் அறியாமலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் இறைபதம் எய்திய தாயாருக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர் தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, தாயாரின் குடும்பத்தினரது துயரிலும் பங்கு கொள்கின்றனர்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam