தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு - வவுனியாவில் சம்பவம்
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (31) கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தையடுத்து தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக ரயில் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தா அல்லது மரணமா என்ற கோணத்தில் விசாரணை
சடலம் மீட்கப்பட்ட ஆண் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு ரயில் பாதையில் போடப்பட்டாரா? என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சடலம் சேட் இன்றி கறுப்புக் காற்சட்டை அணிந்தவாறு காணப்படுகின்றது.
குறித்த சடலம் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
May you like this Video





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
