வவுணதீவில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு (Batticaloa) வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுப்பு
கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு செல்லாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பகுதிக்கு விரைந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.டி. சில்வா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
