யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று (18) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படவில்லை
அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் சடலத்தைப் பார்வையிட்டுப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்துச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி News Lankasri
