திருகோணமலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சூரியபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் வான்எல, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த கே.குலதூங்க வயது 63 என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது மகனுடன் வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில் சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
இதன்போது தந்தை ஸ்தலத்திலே பலியானதுடன், மகன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan