பொலிவியாவில் பேருந்து விபத்து: 30 பேர் பலி
பொலிவியாவில்(Bolivia) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதோச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் மலைப்பாங்கான பகுதியில் வைத்து பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிவியாவில் யோகல்லாவில் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேருந்து சுமார் 2,625 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
14 பேர் காயம்
குறித்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து Potosí மற்றும் Oruro நகரங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து அதிவேகமாக சென்றதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri