இலங்கை சீனா இடையே பனிப்போர் : திணறும் ராஜபக்ச அரசு (video)
சீனாவின் பயோடெக் மற்றும் விவசாய அமைச்சுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய சேதன பசளை ஒப்பந்தத்தினால் இலங்கை - சீன இராஜதந்திர உறவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட உரத்தின் மாதிரிகள் மண்ணின் உயிர்சத்துக்கு பாதிப்பாக அமையும் என்றுகூறி இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.
மேலும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தரத்துடன் அது இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் பயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மண்ணின் உயிர்ச்சத்துக்கு கேடு விளைவிக்கும் எத்தகைய உரத்தையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட உர மாதிரிகள் உயிர்ச்சத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளதாக பரிசோதனை மாதிரிகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது விசேட தொகுப்பு,