சிவப்பு வயிறுடன் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!
இறந்தநிலையில் சிவப்பு வயிறுடன் டொல்பின் மீன் ஒன்று இன்று கல்முனையில் கரை ஒதுங்கியுள்ளது.
4-5 அடி நீளமான இந்த டொல்பின், கல்முனை - பாண்டிருப்பு என்ற இடத்தில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்த டொல்பின் குறித்து தகவல் வெளியானதை அடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
இந்த டொல்பின் மீன் இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. அண்மையில் இறந்த ஆமைகள் அம்பாறை மாவட்டத்தில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த
ஆமைகள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த மாதம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஆமைகள்
மற்றும் குறைந்தது 5 டொல்பின்கள் இறந்துள்ளன.
