தென்னிலங்கையில் ஏற்பட்ட விசித்திரம் - உயிரிழந்தவர் மீண்டும் வந்தார்
களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது சகோதரர் இறந்து விட்டதாக மரண நிவாரண சங்கத்திடம் கூறி 26000 ரூபாவை பெண் ஒருவர் மோசடியாக பெற்றுள்ளார்.
புளத்சிங்கள, மொல்காவ, பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் கலவான பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரன் இறந்துவிட்டதாக ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டமையினால் மரண நிவாரண சங்கத்தினர் மரண சடங்குகளை செய்ய தயாராகியுள்ளனர். எனினும் மரண நிகழ்வு வேறு ஊரில் நடப்பதாக கூறி தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த மரண நிவாரண சங்க நிர்வாகிகள் இறந்தவரின் மரண சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறியபோது, கிடைத்த தொகையில் பாதியை செலுத்தி சங்கத்தில் இருந்து விலகுவதாக அந்த பெண் தெரிவித்தார்.
உயிருடன் உள்ள ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறியதாக சங்கத்தின் பொருளாளர் புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
