வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் சடலம் மீட்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.09) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
பொலிஸார் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு பயணித்த புகையிரத்த்தில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதனால், குறித்த நபர் மரணித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்க நபராவார். இதேவேளை, சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri