மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று முன்தினம்(17.12.2022 மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
தளவாய் பனந்தோப்பு பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் , சுமார் 15 நாட்களுக்கு முன் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கிட்டவாறு இருந்த சடலத்தை அவதானித்த கிராமத்தவர் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் உள்ளிட்டோர் சடலதத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலத்தின் அடையாளங்கள்
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தம்பிலெப்பை றம்ளான் என்பவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உருக்குலைந்த நிலையிலிருந்த சடலத்தின் அடையாளங்களை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
