வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தினை இன்று (29.07.2023) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மக்கள்
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞருக்கு அருகில் கட்டுத்துப்பாக்கியும், அந்த இளைஞரின் மோட்டார்சைக்கிளும் காணப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பொது மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் சடலத்திற்கு அருகில் இடியன் துப்பாக்கி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பனவும் காணப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |