யானை தாக்குதலில் உயிரிழந்த முதியவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்க இலக்கிய உயிரிழந்த நிலையில் இனம்தெரியாத முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க நிலையில் உள்ளவறே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள மியான்குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்பதற்கு சென்றவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

பிரதேச பரிசோதனை
சம்பவ இடத்திற்கு பொலிசாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்காந் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறை குளிரூட்டியில் சடலத்தை 21 நாட்கள் வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சடலத்தை அடையாளம் காண்பதற்கு வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
மேலதிக செய்தி-நவோஜ்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam