மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காதில் ரத்தம்
சடலத்தை பரிசோதித்த போது, வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும், இது சந்தேகத்திற்கிடமான மரணம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீதவான் விசாரணை
இதேவேளை, பொலன்னறுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொதுக்கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
