கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு (Video)
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் ஆலங்கேணி அம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் வீதி ஓரத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள கண்டல் காட்டு பகுதியில் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பில் வாக்குமூலம்
சடலமாக மீட்க்கப்பட்டவர் கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் கலால்தீன் (51வயது) எனவும் அவர் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் கடந்த 8 வருட காலமாக பணி செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் குறித்த நபர் இரவு நேரத்தில் அப்பண்ணையிலேயே தங்குவதாகவும் அவருடன் வேலை செய்பவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், உயிரிழந்த நபர் நள்ளிரவுக்கு பின்னர் பண்ணையில் காணவில்லை எனவும் வெளியில் தேடிய போது அவரது காலணி மாத்திரம் வீதியோரத்தில் இருந்ததை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்ட நபர் போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர் எனவும் 20 வருட காலமாக ஆலங்கேணி பகுதியில் இருவேறு இடங்களில் கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
