பயணப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
சீதுவ பிரதேசத்தில் பயணப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சடலம் நீல நிற பயணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை சீதுவ பெல்லனவத்தை, கிண்டிகொட பிரதேசத்தில் இனந்தெரியாத சடலம் ஒன்று காணப்படுவதாக சீதுவ பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆணின் சடலம்
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டது.
பிரேத அறை
நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri