பெண்ணொருவர் சடலமாக மீட்பு: தொடர்பிலிருந்த நபரை தேட நடவடிக்கை (VIDEO)
புத்தளம் - ஜயபிம பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் காணப்பட்ட குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடொன்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்கள் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதுடன், அப்பகுதிக்கு சென்று உதவி நீதவான் மொஹமட் இக்பாலும் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண் மூன்று கிழமைகளுக்கு முன் குறித்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் நபரொருவருடன் தொடர்பிலிருந்துள்ளதாக தெரியவரும் நிலையில், அந்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உதவி நீதவான் மொஹமட் இக்பால் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
