குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை
இராகலை (Ragala) குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று (3.4.2024) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்மார் மேற்பிரிவு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் குறித்த சடலம் பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
குறித்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மேலும் நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் குளத்தில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் குளத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து குளத்தில் போட்டிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
