மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு (PHOTOS)
Batticaloa
Eravoor
By Kumar
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தளவாய் பகுதியிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செங்கலடி, தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி கித்துள்
பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீதர் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US