முன்னாள் எம்.பி. தயாசிறி திசேரா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் இன்று (04.01.2024) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அத்துடன், அந்த கட்சி தலைமையில் மலரவுள்ள கூட்டணிக்குத் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இணைந்த மற்றுமொரு எம்.பி
தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம், நாத்தான்டி தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் தயாசிறி திசேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா கடந்த முதலாம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri