இணையத்தள செயற்பாட்டாளர்கள் வழங்கும் நீதிமன்ற தீர்ப்புகள் : அரசாங்கத்தை கடுமையா சாடிய தயாசிறி எம்.பி
இணையத்தள தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவர் நீதிமன்ற தீர்ப்புகளை தீர்மானிக்கும் நிலைக்கு அரசாங்கத்தின் நீதித்துறை வலுவிழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்படுவார்.
நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக
அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனது இணையத்தள தொலைக்காட்சியை நிறுத்தி விடுவதாக சுதத் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு இணைத்தள உரிமையாளர் நீதித்துறைக்கு இவ்வாறு அழுத்தம் கொடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படடுள்ள சில வழக்குகளில் அமைச்சர்களை விசாரணை செய்யுமாறு ஆணையிடும் நீதிபதிகள் இடமாற்றப்படுகின்றனர்.
நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் உரையாற்றினாலும் ஒன்று நடக்கவில்லை என்றால் நீதியின் மேல் மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டு விடும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
