கோப் குழுவின் தலைவர் பதவி: தயாசிறி ஜயசேகர கடும் எதிர்ப்பு
மொட்டு கட்சியினர் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தலைவராக ரோஹித்த அபேகுணவர்தனவை நியமித்தமையின் ஊடாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடந்த கால பாடங்களை கற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் ஒருவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும், இந்த பதவிக்கு நன்றாக கற்ற புத்திசாதூரியமானவர்கள் நியமிக்கப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப் குழுவின் தலைவர் பதவி
அரசாங்கம் தூர நோக்குடன் செயற்படவில்லை எனவும் குறுகிய கால அடிப்படையில் நகர்வுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எவ்வித எதிர்காலமும் கிடையாது எனவும், இன்னும் சிறிது காலத்திற்கே இந்த விடயங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எதேச்திகாரமான தீர்மானங்களை எடுத்து வருவதாகவும், கோப் குழுவின் தலைவர் பதவிக்கு ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் தயாசிறி ஜயசேகர இந்த விடயங்களை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
